எகிப்தில் ஒரே வாரத்தில் 90க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு

by Staff / 04-04-2022 11:53:16am
எகிப்தில் ஒரே வாரத்தில் 90க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 90 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

லிபியாவில்  இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடி 100க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் படகில் சென்றபோது படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

அவர்களில் 4 பேரின் சர்வதேச கடல் எல்லையில் எண்ணெய் கப்பல் மிட்டு  உள்ளது மற்ற தொழிலாளர்கள் மத்தியதரைக்கடல் பகுதியில் மூழ்கி  இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப் படி ஜனவரி 1 முதல் மார்ச் 28 வரை மத்திய தரைகடல் வழித்தடத்தில் சுமார் 300 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via

More stories

Logo