தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இன்றுபங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் கையில் வேலுடன் சாமி தரிசனம் செய்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து கட்சி இன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தை தொடங்கினார். தலைமையில் இடம்பெற்று இருக்கும் தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிடும் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை இன்று திருத்தணியில் இருந்து தொடங்கினார். திருத்தணியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியவர் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பின்னர் அரக்கோணம் சாலை முதல் சித்தூர் சாலை சந்திப்பு வரை திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார்.
Tags :



















