தமிழகத்தில் ரூ.4.5 கோடி பணம் சிக்கியது.. பாஜகவுக்கு தலைவலி

by Staff / 07-04-2024 12:17:49pm
தமிழகத்தில் ரூ.4.5 கோடி பணம் சிக்கியது.. பாஜகவுக்கு தலைவலி

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் நேற்று (ஏப்ரல் 7) இரவு ரூ. 4.5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட்டுள்ளது. பிடிபட்ட நபரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பாஜக நிர்வாகிகள் என்பது தெரிய வந்தது. பணத்தை நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்ல முயன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். தேர்தல் பண பட்டுவாடா செய்வதற்காக பணம் நெல்லைக்கு எடுத்து செல்லப்படுகிறதா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ள போலீசார், நயினார் நாகேந்திரனிடமும் இது குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

Tags :

Share via