நடிகை சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் சிறை!

by Editor / 28-04-2021 08:35:16am
நடிகை சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் சிறை!

கோட்டயம் அருகே உள்ள செங்கனூரை சேர்ந்த நடிகை சரிதா நாயர் திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்பட பல நகரங்களில் 'சோலார் சிஸ்டம்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர் 2012ஆம் ஆண்டு சோலார் பேனல் அமைத்துக் கொடுப்பதாகக் கூறி சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரூ.42.70 லட்சம் மோசடி செய்துவிட்டதாகப் புகார் அளித்தார். மேலும் பணத்தை திரும்ப கேட்டபோது மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

 அந்த புகாரின் அடிப்படையில் பிஜு ராதாகிருஷ்ணன், சரிதா நாயகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயர், நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு சரிதா நாயரைக் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து சோலார் பேனல் மோசடி வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 2ஆவது குற்றவாளியான சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
 
முதல் குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன் மீதான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் 3ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த பி.மணிமோன் விடுவிக்கப்பட்டுள்ளார். சோலார் பேனல் மோசடி மட்டுமல்லாது கேரளாவில் சில முக்கிய அரசியல் தலைவர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் சரிதா நாயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :

Share via