உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நடிகர் சித்தார்த் எச்சரிக்கை!

by Editor / 28-04-2021 08:09:21am
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நடிகர் சித்தார்த் எச்சரிக்கை!

கொரோனா தொற்றால் நாடே ஸ்தம்பித்து போய் உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் தட்டுப்பாடு, படுக்கைகள் பற்றாக்குறை என அமைத்து மாநில அரசுகளும், மக்களும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இப்போது இருக்கும் சூழலில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே தொற்றில் இருந்து தப்ப முடியும் என மத்திய,மாநில அரசகள் கூறி வருகின்றன. டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடால் நோயாளிகள் அதிக அளிவில் இறப்பது தொடர்கிறது.
 
அதே போல் உத்தரப்பிரதேசத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆக்சிஜன் இல்லை என்று பொய் சொல்லும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனகூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு நடிகர் சித்தார்த் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ''மனிதராக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும், பொய் சொன்னால் அறை விழும்'' என கடுமையாக தெரிவித்துள்ளார்.

Tags :

Share via