முறுக்கு எப்படி செய்வது ?

by Admin / 02-08-2021 11:00:50pm
முறுக்கு எப்படி செய்வது ?

 

தேவை

பச்சை அரிசி – 1 கிலோ

வெண்ணெய் அல்லது நெய் – 2 டீஸ்பூன்

உப்பு – 1 டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு – 300 கிராம்

சீரகம் அல்லது எள் – 1 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்

செய்முறை

       பச்சரிசியை நனைய வைத்து உரலில் இடித்து கப்பில்லாமல் நைசாக சலித்துக் கொள்ளவும். உளுந்தம் பருப்பு லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். சீரகத்தை பொடி செய்து மாவுடன் சேர்க்கவும். உப்பை சிறிது நீர் விட்டு கரைத்து மாவில் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து கையில் தண்ணீர் தொட்டுக் கொண்டு முறுக்கு குழலில் மாவை வைத்து எண்ணெயில் சிறு சிறு வட்டங்களாக பிழிந்து இருபக்கமும் வெந்து சத்தம் நின்றதும் கம்பில் எடுக்கவும். ஒரு தடவைக்கு 1 முறுக்கு சுடலாம். (முறுக்கு மாவுடன் மிளகாய் தூள் சேர்த்து கார முறுக்கு சுடலாம்.

 

Tags :

Share via