உருளைக்கிழங்கு போளி செய்முறை

by Admin / 02-08-2021 10:57:22pm
உருளைக்கிழங்கு போளி செய்முறை

 

தேவை

கடலைப்பருப்பு – 1 மேஜைக்கரண்டி

உளுந்தம்பருப்பு – 1 மேஜைக்கரண்டி

முந்திரிப்பருப்பு – 10

மைதா மாவு – 2 கப்

பச்சை மிளகாய் – 1

கடுகு – 1 தேக்கரண்டி

உப்பு – 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி

உருளைக்கிழங்கு – 10

மல்லியிலைசிறிது

கருவேப்பிலைசிறிது

செய்முறை

       வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, மல்லியிலை, போட்டு வதக்கி அதனுடன் வேக வைத்து உதிர்த்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள், பொடி செய்த தூள் கலந்து கிளறி இறக்கி வைக்கவும். மைதாமாவில் உப்பு, சிறிது எண்ணெய், தண்ணீர் சேர்த்து போளிக்குமாதிரி பிசைந்து வைத்துக்கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஒவ்வொரு உருண்டையும் எடுத்து கையில் விரித்து நடுவில் சிறிது பூரணத்தை வைத்து மூடி போளிக்குமாதிரி இலையில் விரித்துக் கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் போளியைப் போட்டு சுற்றி டால்டா அல்லது நெய் ஊற்றி இரண்டு பக்கங்களையும் வேக வைத்து எடுக்கவும்.

 

Tags :

Share via