நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு  4 மாத அவகாசம் : உச்சநீதிமன்றம் உத்தரவு

by Editor / 27-09-2021 03:30:49pm
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு  4 மாத அவகாசம் : உச்சநீதிமன்றம் உத்தரவு

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. 
தமிழகத்தில் முந்தைய அதிமுக அரசால் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அடுத்த மாதம் நடக்க உள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து உள்ளாட்சி அமைப்புக்களில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது.


முன்பு தமிழகத்தில் இருந்த 328 பஞ்சாயத்துக்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நகரப் பஞ்சாயத்துக்கள் 664 ஆக இருந்தது தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 6 மாநகராட்சிகளும் 28 நகராட்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. தவிர திருச்சி, நாகர்கோவில், ஓசூர், தஞ்சை, மந்கராட்சி எல்லைகள் விரிவாக்கம் செயுயபட்டுள்ளன.


எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு நகராட்சி உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் நடத்த 7 மாத கால அவகாசம் கோரி தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை 4 மாத கால அவகாசத்தில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via