மதுரை - தேனி முன்பதிவில்லா தினசரி பயணிகள் ரயில் சேவை வரும் 27ஆம் தேதி முதல் தொடக்கம்
மதுரை - தேனி இடையேயான முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவையானது 27. தேதி காலை 8.30மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு வட பழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ரயில் நிறுத்தங்கள் வழியாக 9.35மணிக்கு தேனி சென்றைடையும் எனவும்,மறு மார்க்கமாக தேனியில் இருந்து மாலை 6.15க்கு புறப்பாடாகும் ரயிலானது ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி நிறுத்தங்கள் வழியாக இரவு 7.35மணிக்கு மதுரை ரயில்நிலையம் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.12 பெட்டிகள் உள்ள பயணிகள் ரயிலானது தினசரி ரயிலாக இயங்கவுள்ளது.மதுரை தேனி மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான, மதுரை டூ தேனி ரயில்சேவை 10ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நிறைவேறியுள்ளது பொதுமக்கள் மகிழ்ச்சி .
Tags : Madurai - Theni unreserved daily passenger train service will start from the 27th