அமைச்சரை டிஸ்மிஸ் செய்க - தமிழ்நாடு காங்கிரஸ் கொந்தளிப்பு

by Staff / 01-04-2024 01:03:36pm
அமைச்சரை டிஸ்மிஸ் செய்க - தமிழ்நாடு காங்கிரஸ் கொந்தளிப்பு


கச்சத்தீவு விவகாரம் பற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார். பிரச்சாத்திற்கு நடுவே செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரகசிய காப்பு பிரமாணம் எடுத்தவர், அரசின் ரகசியங்களை வெளியே சொல்கிறார். தேர்தலுக்காக அரசின் கொள்கை முடிவு ரகசியங்களை வெளியே சொல்வதை விட இந்த நாட்டுக்கு மானக்கேடு வேறு எதுவும் கிடையாது. குடியரசுத் தலைவர், அமைச்சர் ஜெய்சங்கரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என கூறினார்.

 

Tags :

Share via
Logo