நடத்தை சரியில்லாத அத்தைமகனை திருமணம் செய்ய மறுப்பு கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து.

by Editor / 09-12-2024 10:20:51pm
நடத்தை சரியில்லாத அத்தைமகனை திருமணம்  செய்ய மறுப்பு கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ரேவதி தம்பதியினரின் இரண்டாவது மகள் வசந்த பிரியா இவர் மன்னார்குடியில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் வசந்த பிரியாவின் அத்தை மகனான மகாதேவன் இருவரும் கடந்த  நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாதேவனின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை திருமணம் செய்ய வசந்த பிரியா மறுப்பு தெரிவித்ததாக  கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று கல்லூரிக்கு சென்று விட்டு மதியம் தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வசந்த பிரியாவை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்தை மகனான மகாதேவன் வீட்டிற்குள் புகுந்து வசந்த பிரியாவின் கழுத்து கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.இதனையடுத்து அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மகா தேவனை தேடி வருகின்றனர்.
 

 

Tags : நடத்தை சரியில்லாத அத்தைமகனை திருமணம் செய்ய மறுப்பு கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து.

Share via