ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதி நாளான செப்டம்பர் 17ஆம் தேதி வைக்கம் விருது- முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Admin / 30-03-2023 12:05:13pm
 ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதி நாளான செப்டம்பர் 17ஆம் தேதி வைக்கம் விருது- முதலமைச்சர் மு க ஸ்டாலின்

இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்வை நினைவு கூர்ந்ததோடு ஏப்ரல் ஒன்றாம் தேதி கேரளாவில் வைக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொள்வதாகவும் அங்கு அமைக்கப்பட்டிருக்கின்ற நினைவுவளைவையும் திறந்து வைப்பதாகவும் அறிவித்ததோடு வைக்கத்தில் பெரியார் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்  வைக்கம் போராட்டத்தினுடைய நூற்றாண்டு நிகழ்வின் பொழுது வைக்கப் போராட்ட வரலாற்றை மலையாளத்திலும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார் ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதி நாளான செப்டம்பர் 17ஆம் தேதி பிற மாநிலங்களில் உள்ள சுயமரியாதை சீர்திருத்த பணிகளில் ஆளுமையாக திகழ்கிறவர்களுக்கு வைக்கம் விருது வழங்கப் படுவதாகவும் அறிவித்தார் தமிழ்நாடு  பாடநூல் நிறுவனம்  வைக்கம் போராட்டத்தின்வரலாறை  தமிழ்  கன்னடம்  தெலுங்கு மலையாளம்  உள்ளிட்ட மொழிகளில் வெளிவிடுவதற்கான பணிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்ததோடு எட்டு கோடி ரூபாய் கான பெரியார் வைக்கம் போராட்டத்தினுடைய நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட பணிக்கு ஒதுக்கீடு செய்வதாகவும் 110 விதியின் கீழ்  அறிவிப்பை வெளியிட்டார்

 

Tags :

Share via