ஒருமையில் பேசிய அமைச்சர்.. பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

by Editor / 17-04-2025 03:50:38pm
ஒருமையில் பேசிய அமைச்சர்.. பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில், பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். முன்னதாக, தங்களை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாக கூறி, பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “கேள்வி கேட்பவர்களை எல்லாம் சேகர்பாபு ஒருமையில் பேசுகிறார்” என குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via