“திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து” - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “கோயில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படும்” என அறிவித்துள்ளார். மேலும், “திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாத பௌர்ணமி, பழனி கோயில் தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோயில் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகிய நாட்களிலும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும்” என அறிவித்துள்ளார்.
Tags :