முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வாழ்த்து

by Staff / 02-03-2023 01:44:44pm
முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வாழ்த்து

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னிலை வகிக்கும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அண்ணா அறிவாலயம், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், ஈரோடு கிழக்கு தொகுதி, மற்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சியினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories