மாவட்ட ஆட்சித்தலைவரை சந்திக்கவந்த திமுக மாவட்ட பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 22-07-2023 12:30:32am
மாவட்ட ஆட்சித்தலைவரை சந்திக்கவந்த திமுக மாவட்ட பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி.

தென்காசி மாவட்ட ஊராட்சியின் உடைய சாதாரண கூட்டம் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கியவுடன் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி மற்றும் சாக்ரடீஸ் ஆகியோர் மாவட்ட பஞ்சாயத்து தலைவி ஒரு தலை பட்சமாக செயல்படுவதாகும் போதிய அளவுக்கு தங்களது வார்டுகளுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வருவதாகவும் கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் கையில் பதாகைகளை ஏந்தி அதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாவினுடைய தூண்டுதலின் பேரில் திமுக மாவட்ட ஊராட்சி தலைவி திமுகவின் உடைய மாவட்ட கவுன்சிலர்களுக்கு வேலைகள் வழங்காமல் நிதி ஒதுக்கீடு செய்யாமல் திட்டமிட்டு புறக்கணித்து வருவதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு காரணமாக கூட்ட அரங்கில் வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு தரப்பினரும் நீ ..வா ..போ.. என்கின்ற அளவில் பேச்சுவார்த்தை தொடங்கினார். இந்த நிலையில் மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து என்பவர் மேஜை ஓங்கி ஓங்கி தட்டி தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும் கவுன்சிலர் பூங்கொடியும் ராஜா எம்எல்ஏ வை குற்றம் சாட்டியதற்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் தொடர்ந்து வாக்குவாதம் நீடித்தது. இந்த நிலையில் தலைவர் தமிழ்ச்செல்வி கூட்டம் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் சகிதம் எழுந்து புறப்பட்டுச் சென்றார். கூட்ட அரங்கத்திற்குள் திமுக கவுன்சிலர் கனிமொழி மற்றும் சாக்ரடிஸ்  ஆகியோர் உள்ளே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து 4 மணிநேரமாக நடந்த போராட்டத்தைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை மாவட்ட கவுன்சிலர் கனிமொழி,சாக்ரடிஸ் ஆகியோர்  சந்திப்பதற்காக காவல்துறை அழைத்து வந்து காத்திருந்த நேரத்தில்  மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, மாவட்ட ஆட்சித்தலைவர் அறையின் முன்பு மயங்கி கீழே விழுந்தார். மிகவும் மோசமான நிலையில் அவர் மருத்துவமனைக்கு மகளிர் காவலர்கள் உதவியோடு தூக்கிச் செல்லப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. மாவட்ட ஆட்சியர் அறையின் முன்பு மாவட்ட கவுன்சிலர் கிறங்கி கீழே விழுந்த போது ஆட்சியர் அறையை விட்டு வெளியே வரவில்லை என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திமுக மாவட்ட ஊராட்சி தலைவி செயலை கண்டித்து திமுக கவுன்சிலர்களை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவரை சந்திக்கவந்த திமுக மாவட்ட பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி.
 

Tags :

Share via