பிரதமர் மோடிக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சரமாரி கேள்வி

உலகில் எங்காவது பேருந்து சேவை இல்லாமல் மெட்ரோ ரயில் சேவை மட்டும் இருப்பதை காட்ட முடியுமா என்று மகளிர் இலவச பேருந்து பயணங்களால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். பேருந்து சேவையால் மெட்ரோ சேவை பாதிப்பதை நிரூபிக்க முடியுமா? என்றும், சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பல ஆண்டுகளாக நிதி தராமல் நிறுத்திவைத்திருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags :