உதகையில் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

by Editor / 23-08-2021 09:44:27am
உதகையில் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி, 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறப்பு,ஆந்திர, கர்நாடக மாநிலத்திற்கு பொது பேருந்து போக்குவரத்து சேவை உள்ளிட்ட பல அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்புகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சூழலில் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் உதகையில் ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று காலை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்து , குறிப்பிட்ட சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டறிதல், நோய் தொற்றுக்குள்ளானவா்கள் உடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கோட்பாடுகள் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via