"திமுகவிற்கு பக்க பலமாக இருப்போம்" - வைகோ

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூலை 2) நேரில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்தேன். திமுகவிற்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நாங்கள் பக்க பலமாக இருப்போம். இந்துத்துவா சக்திகள், சனாதன சக்திகள் பாஜகவுடன் சேர்ந்து திராவிட இயக்கத்தை அழித்து விட நினைக்கின்றனர். இமய மலையைக் கூட அசைத்து விடலாம், ஆனால் திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது” என்றார்.
Tags :