மொராக்கோவில் பலி எண்ணிக்கை 2,000 ஆக உயர்வு

மொராக்கோவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வரலாறு காணாத சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கம் மரகேஷில் இருந்து தென்மேற்கே 72 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,059 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த ஆறு தசாப்தங்களில் அந்த நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும். மொராக்கோவிற்கு உதவ பல நாடுகளும் முன்வருகின்றன. வீடு, உடைமைகளை இழந்து மக்கள் வீதியில் திரண்டு தங்கள் உரியவர்களை பறிகொடுத்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Tags :