குவாரியில் மண் சரிவு ஏற்பட்டு விபத்து ஒருவர் பலி , இருவர் படுகாயம்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இருக்கன்துறை அருகில் அமைந்துள்ள புத்தேரி கிராமத்தில் உள்ள கல்குவாரியில் பாறைகளும்,கற்களும் சரிந்துவிழுந்ததில் நடந்த விபத்தில் நாகர்கோவிலை சேர்ந்த அருள்குமார் என்பவர் உயிரிழப்பு.கடந்த 2022 ஆம் ஆண்டு நெல்லை அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் நடைபெற்ற விபத்திற்கு பிறகு தற்போது நெல்லை மாவட்டத்தில் மீண்டும் ஒரு கல்குவாரி விபத்து. நடந்துள்ளது.நெல்லை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதல் கல்குவாரிகள் இயங்குவதாக ஏற்கனவே புகார் உள்ளது. தொடர்ச்சியாக அரங்கேறி வரும் கல்குவாரி விபத்துகளை தடுக்க தமிழக அரசு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags : குவாரியில் மண் சரிவு ஏற்பட்டு விபத்து ஒருவர் பலி , இருவர் படுகாயம்.