,நாட்டை- மக்களை- அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவோர்- தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
இன்று ராஜ்ய சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் பொழுது அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் என்று சொல்வது பேஷன் ஆகிவிட்டது என்றும் அதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று சொன்ன கருத்திற்கு இந்தியா முழுவதும் இருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணமாக உள்ளன. பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்ததோடு அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே இன்று இரவுக்குள் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் கர்நாடகா காங்கிரஸ் கட்சி முதல்வர் சீத்த ராமலிங்கயா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.
நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!
Tags :