10 வயது சிறுமி பலாத்காரம்.. 57 வயது முதியவர் கைது
உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 4ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, 57 வயதுடைய முதியவர் ஒருவர் அந்த சிறுமியை ஏமாற்றி வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பள்ளி முடிந்து தாமதமாக வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் முதியவர் கைது செய்யப்பட்டார்.
Tags :