காலியான மாநிலங்களவை பதவிகள் யாருடையது?

தமிழ்நாட்டில் 18 மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புகள் இருக்கின்றன. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, திமுக உறுப்பினர்கள் வில்சன், சண்முகம், அப்துல்லா, அதிமுக சந்திரசேகரன் ஆகியோரின் பதவிகள் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகின்றன. இதனாலேயே மேற்கூறிய 6 உறுப்பினர்களின் இடத்துக்கு புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறுகிறது.
Tags :