போக்சோ வழக்கு: விவசாயி தற்கொலை

by Staff / 05-02-2025 12:58:11pm
போக்சோ வழக்கு: விவசாயி தற்கொலை

தூத்துக்குடி: அத்திமரப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி கரும்பன் (62). இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர் மீது தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு இன்று தூத்துக்குடி போக்சோ  நீதிமன்றத்தில் வர இருந்தது. இந்த நிலையில் கரும்பன் தனது வீட்டின் அருகில் உள்ள கொய்யாமரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via