குமாஸ்தா கொலை வழக்கில் இளைஞர் கைது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(45). இவரது மனைவி தெய்வானை காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். மாரிமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார்.கொளூர்பட்டி தெருவை சேர்ந்த வினோத்(27) என்பவர், தெய்வனையை தவறாக பேசிய புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மாரிமுத்துவை புகாரை வாபஸ் பெறுமாறு வினோத் மிரட்டி உள்ளார். இதுகுறித்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வினோத் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு மாரிமுத்துவை கத்தியால் குத்தி வினோத் கொலை செய்தார். அவரை போலீஸார் தேடி வந்த நிலையில், வினோத்தை கைது செய்தனர்.
Tags :



















