அன்பு ஜோதி ஆஸ்ரம விவகாரத்தில் 4 பேர் கைது:- ஆஸ்ரம நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் தலைமறைவு.

by Editor / 14-02-2023 07:36:36am
அன்பு ஜோதி ஆஸ்ரம விவகாரத்தில் 4 பேர் கைது:- ஆஸ்ரம நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் தலைமறைவு.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் இயங்கி வரும் அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் ஆஸ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் உள்ளிட்ட 16 பேர் மாயமானதும், ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் அம்பலமானது.

ஆஸ்ரமத்தில் பராமரிக்கப்பட்டவர்களை அடித்து துன்புறுத்தியது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, வியாபார உள்நோக்கத்துடன் வெளிமாநிலங்களுக்கு கடத்தியது உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட பிரிவிகளின் கீழ் ஆஸ்ரமத்தின் நிர்வாகி அன்பு ஜூபின், மனைவி மரியா ஜூபின், ஆஸ்ரம பணியாளர்கள் பிஜூ மோகன், முத்துமாரி, அய்யப்பன், கோபிநாத் உள்ளிட்ட 6 பேர் மீது கெடார் போலீசார் வழக்குப்பதிவு.

ஆஸ்ரம பணியாளர்கள் 4 பேரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான ஆஸ்ரம நிர்வாகி அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபினை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories