பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைத்த வெடிகுண்டு வெடித்து 2 போலீசார் பலி

by Admin / 09-08-2021 03:35:34pm
பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைத்த வெடிகுண்டு வெடித்து 2 போலீசார் பலி

பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைத்த வெடிகுண்டுகள் வெடித்ததில் அருகிலிருந்த கட்டிடங்கள் சேதமடைந்தன.

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ஜர்கூன் சாலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்துள்ளன.  இதனருகே போலீசாரின் வேன் ஒன்று நின்றுள்ளது.

இந்நிலையில், அந்த வெடிகுண்டுகள் திடீரென நேற்று மாலை வெடித்துள்ளன. இந்த சம்பவத்தில் 2 போலீசார் பரிதாபமாக பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
 
இது பயங்கரவாத செயலா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo