வாட்டிவதைக்கும் வெயில்..வேகமாக சரியும் நீர் நிலைகளின் நீர்மட்டம்.

by Editor / 12-03-2023 10:09:19am
 வாட்டிவதைக்கும் வெயில்..வேகமாக சரியும் நீர் நிலைகளின் நீர்மட்டம்.

கேரள மாநிலத்தில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. கேரளாவில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் கோடை வெயில் வாட்டி வதைக்கும். பெரும்பாலான வருடங்களில் இந்த மாதங்களில் கோடை மழை பெய்யும் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்காது. இந்த வருடம் மார்ச் மாதத்திலேயே பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கிறது. கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் 40 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. அதுவும் திருவனந்தபுரம், கோழிக்கோடு மாவட்டங்களில் 54 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.மேலும் கேரளமாநிலத்திலுள்ள நீர் நிலைகளில் நீர் இருப்பு மிகவும் சரியத்தொடங்கியுள்ளதாள் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உருவாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 

Tags :

Share via