இலங்கைக்கு படகு மூலம் பீடி இலை கடத்திய 6 மீனவர்கள் கைது

by Staff / 16-12-2022 04:23:41pm
இலங்கைக்கு படகு மூலம் பீடி இலை கடத்திய 6 மீனவர்கள் கைது

தூத்துக்குடியை சேர்ந்த கடலோர காவல் படைக்கு சொந்தமான வஜ்ரா என்ற ரோந்து கப்பல் இன்று பிற்பகல் நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தன.அப்பொழுது ரோந்துக் கப்பலை பார்த்த நாட்டு படகு ஒன்று வேகமாக சென்றது இதைத் தொடர்ந்து கடலோர காவல் படை படையினர் நாட்டுப் படகை சுற்றி வளைத்து பிடித்தனர்.பின்னர் கடலோர காவல் படையினர் நாட்டுப்படகில் இறங்கி சோதனை செய்ததில் அதில் பண்டல் பண்டலாக 3 டன் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததும் படகில் 6 மீனவர்களும் இருப்பது தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடியை சேர்ந்த காட்வின், பிச்சையா, மில்டன் , டார்சன், கிங் , ரட்சகர் ஆகியோர் என தெரியவந்தது.தூத்துக்குடி அருகே பூல்லாவழி கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு இந்த பீடி இலைகளை கடத்திச் சென்றதும் தெரியவந்ததுஇந்திய
கடலோர காவல் படையினர் விசாரணைக்கு பின் நாட்டுபடகுடன் 6 மீனவர்களையும் கைது செய்து தூத்துக்குடி பழைய துறைமுகம் கொண்டு வந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மேலும் கியூ பிரிவு போலீசார், மற்றும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்திய பிறகு தமிழககடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 6 மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட 3டன் பீடி இலைகளை சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர்

 

Tags :

Share via