5 பேர் பலி:தமிழ்நாடு முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய உத்தரவு.

by Editor / 18-05-2025 12:27:09pm
 5 பேர் பலி:தமிழ்நாடு முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நேற்று (மே 17) கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர். இதன் எதிரொலியாக, தமிழ்நாடு முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். உரிய பாதுகாப்பின்றி, தடுப்புகளின்றி உள்ள கிணறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : சாத்தான்குளம் 5 பேர் பலி:

Share via