அதிமுகவை யாராலும் சீண்டிப் பார்க்க முடியாது

by Staff / 02-04-2023 04:43:46pm
அதிமுகவை யாராலும் சீண்டிப் பார்க்க முடியாது

சென்னையில் இருந்து சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு விழுப்புரத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகதொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் செயல்படுவேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். அ.தி.மு.க.வை எவராலும் சீண்டி பார்க்கவும் முடியாது, தொட்டுப்பார்க்கவும் முடியாது. அ.தி.மு.க.வை அழிக்க பார்த்தால் அது கானல் நீராகத்தான் இருக்கும். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும்” என கூறினார்.

 

Tags :

Share via

More stories