மக்களுடன் முதல்வர் - திண்டுக்கல் முகாம்

மக்களுடன் முதல்வர் என்கிற திட்டத்தின் படி திண்டுக்கல் மாநகருக்கு உட்பட்ட 33,34,35,36 மற்றும்48 என ஐந்து வார்டுகளுக்கு பொன்னகரம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாநகராட்சியின் மேயர் துணை மேயர் ஆணையாளர் உதவிஆணையாளர் மண்டல தலைவர் மற்றும் ஐந்து வார்டு கவுன்சிலர்களும் ஐந்து வார்டுகளில் குடியிருந்து வரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் எரிசக்தி துறை விவசாயத்துறை, மின்வாரியம், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை,
ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை,காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆதி திராவிடர் பிற்படுத்தப்பட்டவர் நலத்துறை வாழ்வாதார கடன் உதவிகள் ஆகிய திட்டங்களுக்கு துறை வாரியாக புகார்களுக்கு மனுக்கள் மூலம் குறைகளைப் பெற்று அதற்கு தீர்வு காணப்படும் என்றனர்.
Tags :