கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் மாயம்

by Staff / 25-02-2024 04:21:13pm
கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் மாயம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 3 மாணவர்களை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அம்பத்தூரை சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்துள்ளனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியில் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது மாணவர் பச்சையப்பன் என்பவர் நீரில் சிக்கிக் கொண்டார். பச்சையப்பனை காப்பாற்ற முயன்ற மற்ற மாணவர்களும் ஆற்றில் சிக்கியதை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via