தென்காசி சட்டமன்றத் தொகுதியில் நாளை தபால் வாக்கு எண்ணிக்கை.

by Editor / 12-07-2023 11:32:37pm
தென்காசி சட்டமன்றத் தொகுதியில் நாளை தபால் வாக்கு எண்ணிக்கை. தென்காசி சட்டமன்ற தொகுதி வாக்குகள் மீண்டும் எண்ணி அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆயத்தப் பணிகள் தீவிரம் 2021 தென்காசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களை 370 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாக அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து நாளை  வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இந்நிலையில் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காவல் உதவி கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணி குறித்து நேரில்  ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 13 ஆம் தேதி காலை 10 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கப்படும் எனவும், வேட்பாளர்கள் 18 நபர்கள் உள்ள நிலையில் வேட்பாளர்கள் அல்லது ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர்கள் என 18 முகவர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது பங்கேற்கலாம்.பங்கேற்க விரும்பும் முகவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாக்கு எண்ணிக்கை நாளை காலை 10 மணி அளவில் ஒரு மேஜை கணக்கில் ஏழு பேர் கொண்ட குழு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ளது. மேலும் எண்ணப்பட்டுள்ள இறுதி வாக்கு எண்ணிக்கை நாளை அறிவிக்கப்படுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

Tags :

Share via

More stories