பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 70 மீட்டர் நீளமுள்ள செம்பு கம்பியை கத்தரித்து திருட்டு
மானாமதுரை - விருதுநகர் இடையே உள்ள ரயில்வே பாதையில் மின்சாரமயமாக்கல் பணிகளுக்காக மின் வயர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மின்சார வயர்கள் எளிதாக மின்சாரம் கடத்துவதற்காகசெம்பு கம்பியால் தயாரிக்கப் பட்டது. 07.01.2022 நேற்று இரவு அருப்புக்கோட்டை அருகே சமூக விரோதிகள் 70 மீட்டர் நீளமுள்ள செம்பு கம்பியை கத்தரித்து களவாடி உள்ளனர். இதன் மதிப்பு பல இலட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.திருட்டுக் கும்பல் வயரை கத்தரித்தது போக மீதி வயர்கள் ரயில் பாதையில் தொங்கியுள்ளன. அதிகாலை 5 மணி அளவில் பனிமூட்ட சூழலில் அந்தப் பகுதியில் வந்த சென்னை - செங்கோட்டை வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் பகுதியில் தொங்கிக்கொண்டிருந்த வயர்கள் சிக்கி சுற்றிக் கொண்டன. வயர்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வருகை தந்து அந்த வயர் சிக்கலை எடுத்து ரயில் போக வழி விட்டனர். இதனால் இந்த ரயில் இரண்டு மணி நேரம் சம்பவ இடத்தில் நிற்க வேண்டியதாகிவிட்டது. திருட்டு சம்பவம் குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்னும் மின்சார மயமாக்கும் பணிகள் முடிவடையாததால் அந்த வயரில் 75 கிலோ வாட் மின்சாரம் பாய்ச்சப்படவில்லை.
Tags :
















.jpg)


