முன்னதாகவே  மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு..?

by Editor / 16-12-2023 10:18:13am
முன்னதாகவே  மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு..?

பிப்ரவரியில் மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என தெரிகிறது. தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அட்டவணைப்படி ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் மார்ச்-ஏப்ரலில் தேர்தலை முடித்துவிட்டு மே மாதத்தில் புதிய அரசு ஆட்சியை அமைக்கலாம் கூறப்படுகிறது. பிப்ரவரி 3வது வாரத்தில் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், பாஜக தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் ஆட்சியைகைப்பற்றும் நோக்கில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் ஆட்சியைக் கைப்பற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறது.

 

Tags : முன்னதாகவே  மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு..?

Share via
Logo