பூமிக்கு திரும்பிய "விண்வெளி நாயகன்" சுபான்ஷு சுக்லா

by Editor / 15-07-2025 03:22:11pm
பூமிக்கு திரும்பிய

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பூமிக்கு வந்தடைந்தார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் கொண்ட ஆக்ஸியம்-4 குழு நேற்று (ஜூலை.14) மாலை பூமிக்கு புறப்பட்டது. இந்நிலையில், டிராகன் விண்கலம் அமெரிக்காவின் கலிபோர்னியா அருகேயுள்ள பசிபிக் பெருங்கடலில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பத்திரமாக இறங்கியது. இதன் மூலம் ராகேஷ் சர்மாவிற்கு பின் விண்வெளிக்கு சென்று திரும்பிய 2-வது இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் சுபான்ஷு.

 

Tags :

Share via