ஐடிஐ மாணவரை அடித்து உடலை எரித்துக்கொலை

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சுதந்திரா நகர் 2வது தெருவை சேர்ந்த பிரசன்னா (17) என்ற ஐடிஐ மாணவர். மதுரை மாவட்டம் சிலைமான் அருகே இளமனூர் பகுதியில் கண்மாய்கரையில் பாதி எரிந்த நிலையில் உடலை காவல்துறையினர் மீட்டனர். மதுரையில் ஐடிஐ மாணவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அருகில் ரத்தக்கறையுடன் கல் ஒன்று இருந்த நிலையில் உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் பிரசன்னாவின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஐடிஐ மாணவர் பிரசன்னா நேற்று காலை கல்லூரிக்குச் செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எரிந்த நிலையில் கிடந்த உடல் அருகே கிடந்த சட்டையின் ஒரு பகுதி, மற்றும் உடலில் உள்ள விரல்கள் செருப்பு ஆகியவற்றை அடையாளமாக வைத்து மாணவனின் உடல் என குடும்பத்தினர் உறுதி செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :