சரோஜா தேவி உடலுக்கு கர்நாடக முதல்வர் நேரில் அஞ்சலி
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி நேற்று (ஜூலை 14) உடல்நலக்குறைவால் 87 வயதில் காலமானார். அவரது மறைவு தமிழ், கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 15) அவரின் பெங்களூர் இல்லத்துக்கு நேரில் சென்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து நடிகையின் உடல் அவரின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Tags :



















