நெல்லை,தென்காசியில் கொலை.

by Editor / 02-10-2023 03:16:20pm
நெல்லை,தென்காசியில் கொலை.

நெல்லை டவுன் கீழ ரத வீதியில் இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை டவுன் கீழ ரத வீதியில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை செய்யும் சந்தியா(18) என்ற பெண் பட்டப்பகலில் மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காதல் விவகாரத்தில் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்டம் வீ. கே.புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏந்தலூர் பகுதியில் முத்துப்பாண்டி என்ற முதியவர்  அவரது மனைவி துரைச்சி  என்பவரை தலையில்  கல்லை தூக்கிப் போட்டு படுகொலை செய்துள்ளார் இது குறித்து வீ. கே .புதூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : நெல்லை,தென்காசியில் கொலை.

Share via

More stories