நத்தம் பகுதியில் வரத்து அதிகரிப்பால் நாவல்பழம் விலை வீழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் நாவல் பழம் விளைச்சல் இந்த ஆண்டு அதிகமாக இருப்பதால் கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது . இனிப்பும் துவர்ப்பும் நிறைந்த நாவல்பழம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் வங்கி ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைவது வழக்கம் .
இந்த ஆண்டிற்கான சீசன் கடந்த ஜூலை மாதம் முதல் தேதியில் துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் விளையும் பழங்களை வாங்குவதற்காக திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாது கரூர், மதுரை, சிவகங்கை,ராமநாதபுரம், திருச்சி,புதுக்கோட்டை, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வருவார்கள்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நாவல் பழம் விளைச்சல் அதிகமாக இருப்பதால் கடந்த மாதம் வெளிமாநில பழங்கள் 200 ரூபாய்க்கு மேல் விற்ற நிலையில்,தற்பொழுது தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் நாட்டு பழங்கள் விலை இந்த ஆண்டு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் நாவல் பல பெரியோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் . இந்த பழம் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்றாக நாவல் பழம் உள்ளது . அதிக சத்துள்ள பழங்களில் நாவல் பழமும் ஒன்றாகும்.
முன்பெல்லாம் பள்ளிப்பருவத்தில் உள்ள அனைவரும் நாவல் பழத்தை விரும்பாதவர்களே இருக்கமுடியாது என்று சொல்லும் அளவிற்கு அப்போதெல்லாம் கீழே விழும் பழங்களையும் , மரத்தில் ஏறி உதிர்த்து கொட்டுகிற பழங்களையும் , கடைகளில் வாங்கியும் பழங்களை சாப்பிட ஆர்வம் காட்டினர்.
தற்போது நத்தம் பகுதியில் நாவல் மரங்களின் அடிப்பகுதியில் வலைகள் கட்டப்பட்டு சுத்தமாக சேகரிக்கப்படும் பழங்களை பெரும்பாலோனோர் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.காலங்கள் மாறினாலும் சுவை மாறாமல் இன்றும் தலைமுறை தலைமுறையாய் தனது சுவையால் மக்களை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது நாவல் பழம் .
------------
செய்தியாளர் சிவகுமார் , திண்டுக்கல்
Tags :