மனைவியை அரிவாளால் வெட்டியவருக்கு வலை வீச்சு

by Staff / 19-12-2022 03:59:18pm
மனைவியை அரிவாளால் வெட்டியவருக்கு வலை வீச்சு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள 60 வேலம்பாளையம் வெள்ளிவிழா காலனியை சேர்ந்தவர் ராமு (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு செல்வி (34) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ராமு செல்வியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமுவுக்கும், செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமு அரிவாளால் செல்வியை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதில் காயம் அடைந்த செல்வியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பித்து ஓடிய ராமுவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

 

Tags :

Share via

More stories