அனைத்து வகையான தேசியக்கொடிகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் தகவல்
இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட பாலிஸ்யடர் தேசியக் கொடிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் நாட்டின் 65வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் மூவர்ணக்கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக இயந்திரத்தில் உருவாக்கப்படும் பாலிஸ்யடர் துணியால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய கொடிகள் அனுமதி அளித்து இந்திய தேசியக்கொடி 2002 சட்டத்தில் மத்திய அரசு கடந்த டிசம்பரில் திருத்தம் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
Tags :