by Staff /
13-07-2023
03:28:13pm
தமிழகத்தில் நேற்று இரவு ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. நேற்று இரவு சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுக்க இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்நிலையில் விழுப்புரம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் செங்கல்பட்டு பகுதிகளில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது.
Tags :
Share via