விலைவாசி உயர்வு: 20ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

by Staff / 13-07-2023 03:33:15pm
விலைவாசி உயர்வு: 20ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வரும் 20ஆம் தெதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு, மளிகை பொருட்களின் விலை நாளுக்கு நாள் மக்களை பாதிப்புக்கு ஆளாக்கி வருகிறது. இந்த சூழலில் தமிழக அரசும் விலைவாசியைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், விலைவாசி உயர்வுக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளார்.
 

Tags :

Share via

More stories

Logo