101 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தனியார் நிறுவனம் சார்பில், திருமண ஏற்பாட்டாளர்கள் கருத்தரங்க மாநாடு, மாமல்லபுரம் ரெடிசன் புளூ கடற்கரை விடுதியில், ஏப்ரல் 3 - 4ல் நடந்தது. அதில், இந்திய, வெளிநாட்டு திருமண ஏற்பாட்டாளர்கள்.
சுற்றுலாப் பகுதியான மாமல்லபுரத்தை, திருமண நிகழ்வாக பிரபலப்படுத்துவது குறித்து கலந்துரையாடினர். இதன் முக்கிய நிகழ்வாக, ஏழை, நலிந்த, மாற்றுத்திறனாளி என, 101 ஜோடியினருக்கு, விமரிசையாக இலவச திருமணம் நடைபெற்றது.விடுதி கடற்கரை புல்வெளி பகுதி அலங்கரிக்கப்பட்டு, வழக்கமான திருமண சடங்குகள் நடத்தப்பட்டன. பாமர மணமக்கள், அவ்வளாகத்தை வியந்து ரசித்தனர்.மணமக்களுக்கு, தலா 2 கிராம் தாலி, பட்டு வேட்டி - சட்டை, சேலை, சீர்வரிசை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் அளிக்கப்பட்டன.இந்நிகழ்வு, உலக சாதனையாக நிகழ்த்தப்பட்டு, கின்னஸ் சான்றிதழ் அளிக்கப்பட்டது
Tags :