கைத்துப்பாக்கி விற்பனையை முடக்க கனடா அரசு உத்தரவு
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அலுவலகம், நாட்டில் துப்பாக்கி கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கான சட்டம் மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதால் கைத்துப்பாக்கி விற்பனை முடக்கம் செய்யப்படுவதாக கூறியுள்ளது. துப்பாக்கி வன்முறை அதிகரித்து வரும் நிலையில் அதிரடியாக செயல்பட வேண்டிய கடப்பாடு தங்களுக்கு உள்ளது என்று அரசு தெரிவித்தது. புதிய சட்டம் கனடாவிற்குள் கைத்துப்பாக்கிகளின் பயன்பாடு மற்றும் இறக்குமதியை கட்டுப்படுத்தும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கனடியர்கள் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருக்க வழிவகை உள்ளது. சில துப்பாக்கிகள் பதிவு செய்யப்பட வேண்டும். கனடாவில் அமெரிக்காவை விட கடுமையான துப்பாக்கி சட்டங்கள் உள்ளன. நாட்டின் துப்பாக்கி கொலை விகிதம் பணக்கார நாடுகளை விட அதிகமாக உள்ளது. 2009 மற்றும் 2020க்கு இடையில் கைத்துப்பாக்கிகள் வன்முறையின் முக்கிய ஆயுதமாக இருந்தன.
Tags :