சிவசங்கர் பாபாவுக்கு பெண் ஆசையில்லை :  நல்லவர் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது நடிகர் சண்முகராஜன் 

by Editor / 15-06-2021 04:25:46pm
சிவசங்கர் பாபாவுக்கு பெண் ஆசையில்லை :  நல்லவர் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது நடிகர் சண்முகராஜன் 



சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளி நிறுவனர் சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. அதில் அவருக்கு நெஞ்சுவலி என்று டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்ட நிலையில்  சிபிசிஐடி அதிகாரிகள் டேராடூன் சென்றுள்ளனர்.
இந்தநிலையில் விருமாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சண்முகராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் , “எனது குரு சிவசங்கர் பாபா. நான் அவர் சீடராக 4 ஆண்டுகள் இருக்கிறேன். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்துள்ளதாக கூறுவதில் ஒருதுளி கூட உண்மை கிடையாது. இது முற்றிலும் பொய். புகார் அளித்த முன்னாள் மாணவர்கள் அமிர்தா பாலாஜி, ஆசிப் என்ற இருவருக்கும் பள்ளி மீது உள்ள கோபத்தின் வெளிப்பாடு தான் இது. 
சித்தர் வழிபாட்டை முன்னெடுத்துள்ள பாபாவுக்கு பெண்கள் மீது எந்த நாட்டமும் கிடையாது. அவர் பல பெண்களை படிக்கவைத்து வருகிறார். சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர். அவரை, காமக் கொடூரன் போல சித்தரித்துள்ளனர். இந்த விவகாரத்தால் சீடர்கள் நாங்கள் மனஉளைச்சலில் உள்ளோம். இரு தரப்பையும் காவல்துறை தீவிரமாக விசாரிக்கவேண்டும். தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இதனால் ஒரு நல்லவர் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via