விஜய் தான் நம்பர் 1 நடிகர்- அனல் பறக்கும் இரு படங்களின் செய்திகள்

by Admin / 17-12-2022 11:38:10am
விஜய் தான்  நம்பர் 1  நடிகர்- அனல் பறக்கும் இரு படங்களின் செய்திகள்


விஜய்-அஜீத்  நடித்து பொங்கலுக்கு வெளிவர உள்ள வாரிசு-துணிவு இரு படங்களும் தமிழ் நாட்டில் 400 க்கும் அதிகமானதிரையரங்குகளில் வெளியாக உள்ளது .இதற்கிடையே இரு படங்களைப்பற்றி இரு தரப்பு ரசிகர்களும் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.வாரிசு படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வந்த பொழுது விஜய் ரசிகர்களும்  துணிவு படத்தின் போஸ்டர் வந்தபொழுது அஜித் ரசிகர்களும் கொண்டாடினர்.இந்நிலையில் தமன் இசையில் விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் பல லட்ச பார்வையாளர்களைக்கடந்து பார்க்கப்பட்டதால் விஜய் ரசிகர்திளைத்தனர்.உடன் துணிவு படத்தின் சில்லா. .சில்லா  பாடல் வெளி வந்து அஜித் ரசிகர்களுக்கு வாரிசைவிட அதிகம் பேர்  பார்த்த செய்தி வர அதிக உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள் ெஜயிக்கப் போவது நாங்கள் தான் என்று  மார்தட்ட..விஜய்  ரசிகர்களோ அதிகம் விற்பனையானது  தங்கள் தளபதியின்  படம்தான் என்று உசுப்பேற்ற.. .இதற்கிடையே..ஆந்திரவில் தமிழ் ப்படம் பொங்கலுக்கு வெளியிட முடியாது என்று தெலுங்கு தயாரிப்புசங்கத்தினர் சொல்ல...அதுஒருவழியாக அடங்கிய பொழுது ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் அனுமதி வாங்காது சூட்டிங்கில் யானைகளைப் பயன்படுத்தியது.செய்தியாளர் தாக்கப்பட்டது என வாரிசை தொடர்ந்த சிக்கல் அஜித் ரசிகர்களை சந்தோஷசத்திலும் விஜய் ரசிகர்களை சோகத்திலும் ஆழ்த்தியபொழுது  விஜய் பனையூரில்  தம் ரசிகர்களைச்சந்தித்து உற்சாகமூட்டி பிரியாணி விரூந்தளிக்க...அது மீண்டும் விஜய் ரசிகர்களை மிடுக்குடன் நடக்க  வைத்தது .இந்நிலையில் தான் வாரிசு படத்தயாரிப்பாளர் தில்ராஜீ விஜய்தான் நம்பர் ஒன் நடிகர் என்றுசொல்ல பிரச்சனை புதிய ரூபத்தில் உருவாகி ரசிகர்களுக்குள் மேலும் வன்மத்தை விதைக்க..தில்ராஜீ மறுப்பு தெரிவிக்கலானார்.எப்படியோ இரு தரப்பு ரசிகர்களும் சண்டை போட்டுக்கொண்டால் படம் வசூலை  என்பது தயாரிப்பாளருக்குத் தெரியும்.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் இரு நடிகர்களும் நண்பர்கள் தான் ..தியேட்டர், ஒ.டி.டி ,சேட்லைட் ,ஒவர்சீஸ் என அனைத்து  வழிகளிலும்  பணத்தை கோடி கோடியாக அள்ளப்போவது தயாரிப்பாளர்கள் தான்.ஆனால் ,தெருக்கோடியில் நின்று சண்டை போட்டு பகையாளியாவது ரசிகர்கள் தாம்.

விஜய் தான்  நம்பர் 1  நடிகர்- அனல் பறக்கும் இரு படங்களின் செய்திகள்
 

Tags :

Share via